இந்தியா

தமிழ் படைப்புகள் நீக்கப்பட்டது ஏன்? தில்லி பல்கலை. விளக்கம்

DIN

தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டது தொடர்பாக தில்லி பல்கலைக் கழக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

தமிழ்  எழுத்தாளர்கள் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகளை தில்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. தில்லி பல்கலைக் கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தில்லி பல்கலைக் கழகம் விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக அப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் படைப்பாளிகளின் சாதி, மதம், மொழி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் பல்கலைக் கழகம் செயல்படுவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

மேலும், மொழிப் பாடத்திட்டத்தில் இடம்பெறும் படைப்புகள் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதத்தில் இருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள பல்கலைக் கழக நிர்வாகம் இந்த விவகாரத்தில் உள்நோக்கம் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT