முகப்பு
இந்தியா

தில்லியில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு: தகவல்

தில்லியில் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Updated On : 27 ஆகஸ்ட், 2021 at 3:33 PM
கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

தில்லியில் கரோனா காரணமாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் செப்டம்பர் மாதம் முதல் இரண்டு கட்டங்களாக திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக, செப்டம்பர் 1ஆம் தேதி, 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கும் இரண்டாம் கட்டமாக, செப்டம்பர் 8ஆம் தேதி, 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கும் திறக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் திட்டமிட்டுவருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. 

Advertisement

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.