முகப்பு
இந்தியா

மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் பதவியேற்பு

தமிழக பாஜகவின் முன்னாள் மூத்த  தலைவரான இல.கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக இன்று (ஆக-27) பதவி ஏற்றுக்கொண்டார்.

Updated On : 27 ஆகஸ்ட், 2021 at 12:10 PM
மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் பதவியேற்பு
பகிர்:

தமிழக பாஜகவின் முன்னாள் மூத்த  தலைவரான இல.கணேசன் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக இன்று (ஆக-27) பதவி ஏற்றுக்கொண்டார்.

மணிப்பூர் மாநில ஆளுநராக  இருந்த நஜ்மா ஹப்துல்லாவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய ஆளுநரை நியமிக்கும் தேவை உருவானதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மூத்த பாஜக தலைவரான இல.கணேசனை அம்மாநில ஆளுநராக நியமித்து உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக இன்று (ஆக-27) மணிப்பூர் மாநிலத்தின் 17வது ஆளுநராக இல.கணேசன் பதவி ஏற்றுக்கொண்டார்.

பதவி ஏற்பிற்கு முன் இடைப்பட்ட காலத்தில்  சிக்கிம் மாநில ஆளுநர்  கங்கா பிரசாத் சவுராசியா கூடுதல் பொறுப்பாக மணிப்பூரையும் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.