அரசின் பொய்களை அம்பலப்படுத்தும் கடமை அறிவுசார் சமூகத்திற்கு உள்ளது என உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
பொய் செய்திகள், தவறான பரப்புரைகளிலிருந்து மக்களை காப்பது அரசை சரிபார்ப்பது ஆகியவை ஜனநாயக நாட்டில் முக்கியத்துவம் பெறுகிறது என்றும் அரசின் பொய்களை அம்பலப்படுத்தும் கடமை அறிவுசார் சமூகததிற்கு உள்ளது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.சி. சக்லாவின் நினைவை போற்றும் வகையில் நடத்தப்பட்ட சொற்பொழிவு நிகழ்ச்சியில் பேசிய சந்திரசூட், "சமூக, பொருளாதார, கலாசார... தற்போதை சூழலில் மருத்துவம் தொடர்பான உண்மைகளை வெளியிடுவதில் அரசை அதிகப்படியாக நம்ப வேண்டாம்.
அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் செல்வாக்க செலுத்த முடியாத ஊடகத்தால்தான் தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் கொள்கைகளுக்கும் அரசை பொறுப்பேற்க வைக்க முடியும்.
உண்மையை வெளியில் கொண்டுவர அரசை அதிகமாக நம்ப வேண்டாம். ஆட்சியை தக்க வைப்பதற்காக சர்வாதிகார அரசுகள் பொய்யான செய்திகளை வெளியிடுவது வழக்கம். கரோனா குறித்த தவறான தரவுகள் வெளியிடப்படுவது உலக நாடுகளிடையே அதிகமாக உள்ளது. பொய்யான செய்திகள் வெளியிடப்படுவது அதிகரித்துள்ளது. இதை உலக சுகாதார அமைப்பு சுட்டிகாட்டியுள்ளது. பொய்யான தகவல்கள் அடிப்படையிலான பரபரப்பான செய்திகளை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுகின்றனர்.
இதையும் படிக்க | எங்கே தலிபான் தலைவா்?
பொய்யான செய்திகளுக்கு ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் பொறுப்பேற்க வேண்டும். ஆனால், மக்கள் கவனமாக இருக்க வேண்டும். மாற்று கருத்து குறித்து படிக்கவும் விவாதம் செய்யவும் மக்கள் முன்வர வேண்டும். உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதை ஏற்க வேண்டும். ஒருவரின் கருத்து்கு உடன்படாத உண்மை புறக்கணிக்கப்படுவது வழக்கமாகிவருகிறது" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.