கோப்புப்படம் 
இந்தியா

மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ராஜஸ்தான் முதல்வர்

ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடு திரும்பினார்.

DIN

ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடு திரும்பினார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைக்காக ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சைக்கு பின்பு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் வீடு திரும்பினார். இதுகுறித்து கெலாட் ட்விட்டர் பக்கத்தில், "மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீடு திரும்புவதற்கு முன்பு என் பேத்தி எனக்கு நெற்றியில் திலகம் வைத்தார்.

நெஞ்சில் அசெளகரியம் ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து சனிக்கிழமை வெளியிடப்பட்ட மருத்துவமனை அறிக்கையில், "கெலாட்டின் முக்கிய தமனி ஒன்றில் 90 சதவிகிதம் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது, மீண்டு வந்துக்கொண்டிருக்கிறார். அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர் நன்றாக இருப்பது தெரியவந்துள்ளது. மருத்துவர் குழு அவரை கண்காணித்து வருகிறது. தற்போது, நல்ல உடல்நலத்துடனும் உற்சாகத்துடனும் உள்ளார். நாளையே அவர் வீட்டிற்கு அனுப்பப்படுவார்" எனக் குறிப்பிடப்பட்டது.

இந்தாண்டு ஏப்ரல் மாதம் கரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து 70 வயதான அசோக் கெலாட்டுக்கு பல உடல்நல பிரச்னைகள் ஏற்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை அதிரடி உயர்வு! மீண்டும் ஒரு லட்சத்தைக் கடந்தது!

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது: குடியரசு துணைத் தலைவா் இன்று வழங்குகிறார்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 384 கனஅடியாக குறைந்தது!

600 கிலோவுடன் கின்னஸ் சாதனை படைத்தவர் காலமானார்!

SCROLL FOR NEXT