இந்தியா

கேரளம் : விமான நிலையத்தில் 14.69 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

DIN

கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்தில் இன்று (ஆக-30,திங்கள்கிழமை) காலை கடத்திவரப்பட்ட தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இன்று காலை கண்ணூர் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய பயணியின் கால் சட்டையை பரிசோதனை செய்தபோது அதில் தங்கத்தை உருக்கி இரண்டு அடுக்காக மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின் சுங்கத்துறை அதிகாரிகள் பயணியைக் கைது செய்ததோடு கடத்திவரப்பட்ட 302 கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

அதன்  மதிப்பு 14.69 லட்சம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பயணியின் அடையாளம் மற்றும் எங்கிருந்து வந்தார் என்கிற தகவல் எதுவும் வெளியாகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

60 மணி நேரத்தில் 2,870 கி.மீ. கடந்த ஆம்புலன்ஸ் டிரைவர்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

SCROLL FOR NEXT