கிருஷ்ண ஜெயந்தி: நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணை தலைவர் வாழ்த்து 
இந்தியா

கிருஷ்ண ஜெயந்தி: நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணை தலைவர் வாழ்த்து

ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணை தலைவர் எம். வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்த்துள்ளார்.

DIN

புது தில்லி: ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணை தலைவர் எம். வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்த்துள்ளார்.

அவர் தனது வாழ்த்து செய்தியில், “கிருஷ்ண ஜெயந்தி புனித தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது வாழ்த்துகள். விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக வணங்கப்படும் கிருஷ்ணரின் பிறப்பை கொண்டாடுவது கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாகும். கடமையை செய், பலனை எதிர்பாராதே என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் கூறியுள்ள செய்தி ஒவ்வொரு மனிதனுக்கும் உத்வேகம் அளிக்கிறது.

இந்த புனித தினத்தின், நாம் அனைவரும் நமது கடமைகளை மிகவும் நேர்மையுடன் நிறைவேற்றவும், நீதியின் பாதையில் நடக்கவும் உறுதியேற்போம்.

பொதுவாக கிருஷ்ண ஜெயந்தி பெரும் பாரம்பரியத்துடன் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு கொவிட் காரணத்தால் நாம் எச்சரிக்கையோடு இந்த பண்டிகையை கொண்டாட வேண்டும். அனைத்து கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவோம். இந்த கிருஷ்ண ஜெயந்தி நம் நாட்டில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரட்டும்” என்று கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

SCROLL FOR NEXT