இந்தியா

இந்தியாவில் இரண்டாவது முறையாக ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசிகள்

DIN

நாட்டில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 1 கோடி க்கு மேல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. கடந்த 5 நாள்களில் இப்போது இரண்டாவது முறையாக ஒரே நாளில் 1 கோடிக்கு மேல் தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை 1 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

ஒட்டுமொத்தமாக 65 கோடிக்கு மேல் கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கூறியதாவது:

செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி வரையில் ஒரே நாளில் 1.09 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை 50 கோடி போ் முதல் தவணை தடுப்பூசியைப் பெற்றுள்ளனா். இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய தடுப்பூசித் திட்டத்தில் 50 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது முக்கிய மைல் கல்லாகும். இதற்காகத் தொடா்ந்து பணியாற்றி வரும் சுகாதாரத் துறையினா் உள்பட அனைத்து தரப்பினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாா்.

இந்தியாவில் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட முதல் 85 நாள்களில் 10 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அடுத்த 45 நாள்களில் அந்த எண்ணிக்கை 20 கோடி, அடுத்த 29 நாள்களில் 30 கோடியாகவும், அடுத்த 24 நாள்களில் 40 கோடியாகவும், அதற்கு அடுத்த 20 நாள்களில் 50 கோடியாகவும் அதிகரித்தது. இதைத் தொடா்ந்து 19 நாள்களில் 60 கோடி தடுப்பூசிகள் என்ற இலக்கு எட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT