முகப்பு
இந்தியா

நாக்பூரில் லாரி-கார் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் பலி; தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு

ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரில் லாரி-கார் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் உயிரிழந்தனர். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:02 AM
சிவராஜ் சிங் சௌகான்
பகிர்:

ராஜஸ்தான் மாநிலம் நாக்பூரில் லாரி - கார் இரண்டும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் உயிரிழந்தனர். 

மேலும் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை நடைபெற்ற இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இவர்கள் அனைவரும் மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. 

இந்நிலையில், மத்தியப் பிரதேச முதல்வர்  சிவராஜ் சிங் சௌகான், உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார். 

மேலும் படுகாயமடைந்தவர்களுக்கான சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →