இந்தியா

அதிக தற்கொலை நடக்கும் மாநிலங்களில் தமிழகத்திற்கு 2-வது இடம் : என்சிஆர்பி

DIN

தேசிய குற்றப் பதிவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் 2020-ஆண்டு அதிகம் தற்கொலை நடந்த மாநிலங்களில் தமிழகத்திற்கு 2-வது இடம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில்  2021-நீங்கலாக கடந்த 2018-2020 ஆண்டுகளில் அதிக தற்கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் முதலிடத்தில் இருக்கும்  மகாராஷ்டிரம் மாநிலத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 19,909 என தேசிய குற்றப் பதிவுத் துறை(என்சிஆர்பி) அறிக்கையில் தெரிய வந்திருக்கிறது.

இதில் 16,883 தற்கொலைகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தையும் , 14,578 தற்கொலைகளுடன் மத்தியப் பிரதேசம் 3-வது இடத்திலும் இருக்கிறது. 

2019-ஆண்டை ஒப்பிடும் போது தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் சதவீதம் 9.7-லிருந்து 11 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

மேலும் அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலங்களில் 2018-2020 வரை தொடர்ந்து தமிழகம்  இரண்டாவது இடத்தில் இருப்பதும் தற்கொலைகள் அதிகரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT