ஒமைக்ரான் குறித்து அச்சப்பட தேவையில்லை: மத்திய அரசு
ஒமைக்ரான் கரோனா பரவல் குறித்து அச்சப்பட வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குநர் பல்ராம் பார்கவா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
ஒமைக்ரான் கரோனா பரவல் குறித்து அச்சப்பட வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குநர் பல்ராம் பார்கவா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வகை கரோனா தொற்றானது இந்தியா வந்தடைந்த சர்வதேச பயணிகள் இருவருக்கு உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருந்தது.
இதையும் படிக்க | இந்தியாவில் இருவருக்கு ஒமைக்ரான் தொற்று: மத்திய அரசு தகவல்
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பல்ராம் பார்கவா பேசுகையில்,
“கர்நாடக வந்தடைந்த இருவருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் வகையை கண்டுபிடிக்க நாடு முழுவதும் 37 ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளது. ஒமைக்ரான் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி நடக்க வேண்டும்.”