முகப்பு
இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: மாநிலங்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பு

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:36 AM
பகிர்:

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதையடுத்து பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது  வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக  12 எம்.பி.க்களை மாநிலங்களவையின் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்வதாக நவம்பர் 29ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் எம்.பி.க்களின் இடைநீக்கத்தை திரும்பப் பெற வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவையை பகல் 12 மணிவரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவ.29இல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் 26 முக்கிய மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.