இந்தியா

இந்தியாவில் மூன்றாவது நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி

DIN

ஜிம்பாப்வே நாட்டிலிருந்து குஜராத் ஜம்நகர் வந்தவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

வியாழக்கிழமையன்று, குஜராத்துக்கு வந்த 72 வயது முதயவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவரது மாதிரிகள் மரபணு வரிசைமுறை சோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து அவர் குரு கோவிந்த் சிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஜாம்நகரைச் சேர்ந்த இவர், கடந்த பல ஆண்டுகளாக ஜிம்பாப்வேயில் வசித்து வருகிறார். அவர் தனது மாமனாரை சந்திக்க வந்தபோது ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, பெங்களூருவை சேர்ந்த 46 வயது மருத்துவருக்கும் இந்தியாவுக்கு வந்த தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 66 வயது முதியவருக்கும் ஒமைக்ரான் இருப்பது தெரியவந்தது. பெங்களூருவை சேர்ந்த மருத்துவர் இரண்டு தவணை தடுப்பூசியை ஏற்கனவே செலுத்தி கொண்டதும் அவர் வெளிநாடுகளுக்கு எங்கும் பயணம் செய்யவில்லை என்பதும் பின்னர் தெரியவந்தது. ஆனால், அவருக்கு காய்ச்சல், உடல் வலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்ட தென்னாப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர், இந்திய வந்திருந்த போது கரோனா நெகட்டிவ் சான்றிதழை வைத்திருந்தார்.  தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் கரோனா முதன்முதலில் கண்டறியப்பட்டதிலிருந்து, இந்தியா வரும் அனைத்து சர்வதேச பயணிகளின் சோதனை மற்றும் கண்காணிப்பை நாடு முடுக்கிவிட்டுள்ளது. குறிப்பாக, ஒமைக்ரான் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வருபவர்கள் கடும் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். 

ஒமைக்ரான் எந்தளவுக்கு பரவல் தன்மை கொண்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க இன்னும் இரண்டு வாரங்களாகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதேபோல், தீவிர உடல் நல பாதிப்பை அது ஏற்படுத்துகிறதா, அதற்கான சிகிச்சை எந்தளவுக்கு பயன் தருகிறது, தடுப்பூசி எந்தளவுக்கு செயல்படுகிறது என்பதை தெரந்த கொள்ளவும் இரண்டு வாரங்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT