நாட்டில் இதுவரை 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா
தகுதியான மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தற்போது முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
தகுதியான மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில், "நாம் வெற்றி பெறுவோம். வாழ்த்துகள் இந்தியா. தகுதியான மக்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தற்போது முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.
இது மிகவும் பெருமைக்குரிய தருணம். கரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒன்றாக வெல்வோம்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையும் படிக்க- பழிக்கு பழி வாங்கிய காங்கிரஸ்; கேஜரிவாலின் கோட்டைக்குள் நுழைந்த சித்து...தில்லி அரசியலில் பரபரப்பு
இந்தியாவில் இதுவரை 127.61 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.