நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை தொடங்கியதில் இருந்து நாகலாந்து துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், 12 எம்.பி.க்கள் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரியும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடும் அமளிக்கு மத்தியில் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அவைக் கூடியவுடன் எதிர்க்கட்சியினர் முழக்கங்களை எழுப்பியதால் 3 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல், மக்களவையும் பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் தெரிவித்தார்.