மாநிலங்களவையில் தொடர்ந்து அமளி நீடித்து வருவதால் நாளை காலை 11 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
நாகலாந்தில் ராணுவ வீரர்களால் தவறுதலாக 14 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து இன்று காலை முதலே மாநிலங்களவையில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், அமளிக்கு மத்தியில் மாலை 4 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாகலாந்து சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவைக்கு முன்பு நின்று கோஷங்களை எழுப்பினர்.
அமித் ஷா விளக்கவுரையை முடித்தவுடன், நாளை காலை 11 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.