இந்தியா

7 பேருக்கு அறிகுறிகள் இல்லாமல் 'ஒமைக்ரான்' பாதிப்பு

புணேவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

DIN

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரளில் 7 பேருக்கு அறிகுறிகள் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

அவர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற ஆரம்பகட்ட அறிகுறிகள் மட்டுமே உள்ளதாகவும் சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இன்று (டிச.7) 7 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 4 பேர் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ள கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகியவற்றில் ஒன்றை போட்டுக்கொண்டவர்கள். 

எஞ்சிய மூவரும் 18 வயதுக்கு குறைவானவர்கள். அதில் ஒன்றரை வயது குழந்தை, 7 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

வழக்கமான கரோனா பரிசோதனையின்போது இவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் கடந்த மாதம் 18 முதல் 25-ஆம் தேதி வரை பின்லாந்து நாட்டிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு 29-ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

இதனையடுத்து மேற்கொண்ட கரோனா பரிசோதனையில் அவர்களுக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா மீது 50% வரி! அமெரிக்காவுக்குத்தான் பெரும் பாதிப்பு!

இல. கணேசன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி! | ADMK | EPS

சீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு! 15 நிமிடங்கள் பேச்சுவார்த்தை!

சென்னையில் விநாயகர் சிலைகள் கரைக்கும் பணி தொடக்கம்: பலத்த பாதுகாப்பு

14,000 டி20 ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரராக அலெக்ஸ் ஹேல்ஸ் சாதனை!

SCROLL FOR NEXT