ராகுல் காந்தி 
இந்தியா

உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு: மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார் ராகுல் காந்தி!

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவையில் இன்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவையில் இன்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். 

கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து, மூன்று சட்டங்களையும் மத்திய அரசு ரத்து செய்தது. 

எனினும், விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்திய அரசிடம் இருந்து முறையான பதில் கிடைக்கும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என்று விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா சனிக்கிழமை தெரிவித்தது. மேலும், விவசாயப் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. 

இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மக்களவையில் இன்று ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார். 

முன்னதாக,  விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள் குறித்து கண்காணிக்கவில்லை என்றும் அதனால் இழப்பீடு குறித்த கேள்வி எழவில்லை என்றும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பதில் கூறியதை அடுத்து ராகுல் காந்தி இன்று ஒத்திவைப்பு தீர்மானத்தை அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT