முகப்பு
இந்தியா

பெங்களூரு மருத்துவருடன் இருந்தவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை

ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்த பெங்களூரைச் சோ்ந்த மருத்துவருடன் தொடர்பிலிருந்த யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பெங்களூரு மருத்துவருடன் இருந்தவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு இல்லை
பகிர்:


ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்த பெங்களூரைச் சோ்ந்த மருத்துவருடன் தொடர்பிலிருந்த யாருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை. 

மருத்துவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்து ஐந்து பேருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பில்லை என்றும், டெல்டா வகை வைரஸ் பாதித்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதனால், சுகதாரத் துறையினம் நிம்மதி அடைந்துள்ளனர். 

இந்தியாவில் முதன்முறையாக உருமாறிய ‘ஒமைக்ரான்’ - கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட இருவா் கா்நாடகத்தில் கண்டறியப்பட்டனா். குஜராத்தை மூலமாகக் கொண்டு தென் ஆப்பிரிக்க குடியுரிமை பெற்றிருந்த ஒருவா், ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாட்டுக்கு சென்றுவிட்டாா். இது தொடா்பாக, அந்த நபா் தங்கியிருந்த நட்சத்திர உணவு விடுதியின் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்ட மற்றொருவரான பெங்களூரைச் சோ்ந்த மருத்துவா், ஒமைக்ரான் தீநுண்மி தொற்றில் இருந்து குணமடைந்திருந்த நிலையில், மீண்டும் கரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது பலரையும் அதிா்ச்சி அடையச் செய்துள்ளது.

இந்தத் தகவலை உறுதி செய்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்த மருத்துவா் மீண்டும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். மருத்துவா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளாா். அவருக்கு கரோனாவுக்கான எவ்வித அறிகுறியும் இல்லை என்றாா்.

ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டு துபைக்குச் சென்ற தென் ஆப்பிரிக்க நாட்டை சோ்ந்தவா் மீது காவலர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனா். தனிமைப்படுத்தல் விதிகளை மீறியதாக அவா் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →