இந்தியா

விபின் ராவத் மறைவு: இடைநீக்கப்பட்ட எம்.பி.க்கள் போராட்டம் இன்று ஒருநாள் ரத்து

முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் மறைவையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இன்று ஒருநாள் போராட்டத்தை ரத்து செய்துள்ளனர்,

DIN

முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் மறைவையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இன்று ஒருநாள் போராட்டத்தை ரத்து செய்துள்ளனர், 

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நவ.29இல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது  வேளாண் சட்டங்கள் ரத்து, பெகாஸஸ் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கடும் அமளியில் ஈடுபட்டதாக  எதிர்க்கட்சிகளை சேர்ந்த 12 எம்.பி.க்கள் மாநிலங்களவையின் குளிர்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்வதாக நவ.29ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

அவைத் தலைவரின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ், சிவசேனை, திரிணமூல், கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இன்று போராட்டத்தை ரத்து செய்துள்ளனர். 

முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத்துக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று ஒருநாள் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இன்றைய அவையில் தாங்கள் பங்கேற்க உள்ளதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4கே தொழில்நுட்பத்தில் மறுவெளியீடாகும் தி காட்ஃபாதர் - மூன்று பாகங்கள்!

3டி ஆடியோ, 360 கோணத்தில் பாடல்கள்: விரைவில் வெளியாகிறது ஒன்பிளஸ் 3ஆர் இயர் பட்ஸ்!

பாலியல் குற்றச்சாட்டில் எம்எல்ஏ இடைநீக்கம்: ‘பிற கட்சிகளுக்கு காங். முன்னுதாரணம்!' -வி.டி.சதீஷன்

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.87.68 ஆக நிறைவு!

ஊஊஊ... வடிவேலுவுடனான விடியோவை பகிர்ந்த பிரபு தேவா!

SCROLL FOR NEXT