காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 
இந்தியா

கோவா தேர்தல்: நாளை முதல் பிரியங்கா காந்தி பிரசாரம்

கோவா பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை நாளை முதல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கோவா பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை நாளை முதல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் 3 மாதத்திற்குள் நடைபெறவுள்ளன. இதற்கான பிரசாரத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் துரிதப் படுத்தியுள்ளன.

கோவா பேரவைத் தேர்தலுக்கான பிரசாரத்தை ஆம் ஆத்மியின் அரவிந்த் கேஜரிவால், திரிணமூலின் மம்தா, பாஜக தலைவர்கள் ஏற்கனவே தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வந்த பிரியங்கா காந்தி வெள்ளிக்கிழமை முதல் கோவாவில் பிரசாரம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT