இந்தியா

‘சமஸ்கிருதத்தை நாட்டின் அலுவல் மொழியாக்க வேண்டும்’: சுப்பிரமணிய சுவாமி

DIN

சமஸ்கிருதம் மொழியை நாட்டின் அலுவல்மொழியாக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் உடுப்பியில் நடைபெற்ற் செழித்து வளரும் பண்டைய இந்து நாகரிகம் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “குழந்தைகளின் மன வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுவதை அரசு ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்தி, உருது, மராத்தி மற்றும் நேபாளி மொழிகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் இருந்து உருவானதாலேயே தேவநாகரி எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன எனத் தெரிவித்த சுப்பிரமனிய சுவாமி யோகா தொடர்பான அனைத்து இலக்கியங்களும் சமஸ்கிருதத்தில் உள்ளன எனக் குறிப்பிட்டார்.

சமஸ்கிருத மொழியின் வளர்ச்சி இந்துக்களை ஒன்றிணைக்கவும், அவர்களில் ஒற்றுமை உணர்வை உருவாக்கவும் உதவும் எனத் தெரிவித்த சுவாமி நாட்டின் அலுவல் மொழியாக சமஸ்கிருத மொழியை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அ.தி.மு.க.சாா்பில் 41 இடங்களில் நீா்மோா் பந்தல் திறப்பு

தடை செய்யப்பட்ட சரவெடிகளை தயாரித்த பட்டாசு கடைக்கு சீல்

பட்டாசு மூலப்பொருள்கள் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருப்புவனம் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT