இந்தியா

ஒரே மேடையில் விபின் ராவத், மதுலிகா உடல்கள் தகனம்

DIN


புது தில்லி: ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத்தின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.

தில்லி கண்டோன்மென்ட் மயானத்தில், விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத்தின் உடல்கள் தகனம் செய்யப்பட்டன. இறுதிச் சடங்குகளை மகள்கள் கிருத்திகா மற்றும் தாரிணி ஆகியோர் செய்து, உடல்களுக்கு தீமூட்டினர்.

17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க, 800 வீரர்களின் மரியாதையுடன், விபின் ராவத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தில்லி கண்டோன்ட்மென்ட் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த முப்படை தலைமை தளபதி விபின் ராவத் உடலுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் ஏராளமான முக்கிய நபர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மேலும், பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என். வி. ரமணா, ராணுவ தளபதி நரவானே, விமானப்படை தலைமை மார்ஷல் வி.ஆர். செளத்ரி, கடற்படை தலைமை அட்மிரல் ஹரி குமார் உள்ளிட்டவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். நாட்டு மக்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து, விபின் ராவத், அவரது மனைவி ஆகியோரின் இறுதி ஊர்வலம் வீட்டிலிருந்து புறப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ராணுவ வாகனத்தில் வைக்கப்பட்ட அவர்களது உடல், இறுதி சடங்கு நடைபெறும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

புது தில்லியில் உள்ள கண்டோன்மென்ட் மயானத்துக்குக் கொண்டு வரப்பட்ட தாய், தந்தையின் உடலுக்கு, அவர்களது மகள்கள் கிருத்திகா, தாரிணி ஆகியோர் இறுதிச் சடங்குகளை செய்து, தீமூட்டினர்.

டிசம்பர் 8ஆம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே  நேரிட்ட விமானப் படை ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி விபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உள்பட 13 பர் பலியாகினர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT