குஜராத் மாநிலத்தில் இருவருக்கு ஒமைக்ரான் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.
உருமாறிய ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு உலகின் பல பகுதிகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் ஒமைக்ரான் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மேலும் இருவருக்கு ஒமைக்ரான் கரோனா பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
தொற்று பாதிப்பு உறுதியான இருவரும் முன்னதாக ஒமைக்ரான் பாதிப்பு இருந்தவரிடம் தொடர்பில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம் நாட்டில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.