இந்தியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 202 பேர் பலி
இந்தியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 202 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் ஒரேநாளில் கரோனாவுக்கு 202 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7,350 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 91,456 ஆக உள்ளது.
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 202 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 4,75,636 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 7,973 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 3,41,30,768 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.
இதையும் படிக்க- மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றார் இந்தியாவின் ஹர்னாஸ் கவுர்
நாட்டில் இதுவரை 133 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 19,10,917 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் 8,55,692 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 65.66 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.