இந்தியா

நாடாளுமன்றத் தாக்குதல் நாள்: உயிர்நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மரியாதை

DIN

2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் உயிர்நீத்த தியாகிகளுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; “2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடைபெற்றபோது, தங்கள் கடமையை நிறைவேற்றி உயிர்த் தியாகம் செய்த அனைத்துப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் நான் மரியாதை செலுத்துகிறேன். 
நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவை மற்றும் செய்த உயிர்த்தியாகம் ஆகியவை ஒவ்வொரு குடிமக்களையும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.”  இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

கடந்த 2001ஆம் ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், பாதுகாப்புப்படை வீரர்கள் உள்பட 9 பேர் பலியாகினர். இந்த நிலையில் நாடாளுமன்றத் தாக்குதலின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT