காஷ்மீர்: தொடரும் என்கவுன்டர், ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி சுட்டுக்கொலை
காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள உஸ்ரம்பத்ரி பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்க
காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள உஸ்ரம்பத்ரி பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சார்ந்த பயங்கரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டம், உஸ்ரம்பத்ரி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையுடம் படிக்க | கென்யா: வறட்சியால் மடிந்த உயிர்கள்..
Advertisement
உடனே , தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் தீவிரவாதி பதுங்கியிருப்பதை உறுதி செய்தனர். கைது நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்பாகவே பயங்கரவாதி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டதால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கிறார்கள்.
பலியான பயங்கரவாதி ஃபெரோஸ் அகமது தார் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் இருந்துகொண்டு பல்வேறு தாக்குதலில் ஈடுபட்டதாகவும் ,குறிப்பாக 2017 ஆம் ஆண்டு காவல்துறை மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் முக்கிய மூளையாக இருந்து செயல்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.