மாணவ, மாணவியருக்கு ஒரே மாதிரியான சீருடை: கவனம் ஈர்த்த கேரளப் பள்ளி 
இந்தியா

மாணவ, மாணவியருக்கு ஒரே மாதிரியான சீருடை: கவனம் ஈர்த்த கேரளப் பள்ளி

கேரள மாநிலத்தில் பாலின பாகுபாட்டைக் களையும் வகையில் மாணவ மாணவிகளுக்கு ஒரே மாதிரியான சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது. 

DIN

கேரள மாநிலத்தில் பாலின பாகுபாட்டைக் களையும் வகையில் மாணவ மாணவிகளுக்கு ஒரே மாதிரியான சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது. 

கேரள மாநிலத்தில் இடதுமுன்னணி கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் செயல்பட்டு வருகிறது பலுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி. 

இந்தப் பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கான சீருடை அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது. மாணவ, மாணவிகளுக்கிடையேயான பாலின பேதத்தைக் களையும் வகையில் ஒரே மாதிரியான சீருடையை பள்ளி நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பள்ளி நிர்வாகத்தின் அறிவிப்பை ஏற்று மாணவ, மாணவிகள் ஒரே மாதிரியான சீருடையை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.

இதற்கு மாநில அரசு வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து இதுபோன்ற முன்னெடுப்புகளை எதிர்ப்பவர்கள் கேரளம் மற்றும் அதன் எதிர்கால சந்ததியினரின் நலன்களுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.

முன்னதாக எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரம்பாவூர் அரசுத் தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவியருக்கு ஒரே மாதிரியான சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

கடலலை நடனம்... ஃபெளசி!

ஜேகே பேப்பர் நிகர லாபம் 39.6% சரிவு!

SCROLL FOR NEXT