இந்தியா

நாடாளுமன்றத்தில் பல்வேறு விவகாரங்களுக்காக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்.பி.கள் இணைந்து பல்வேறு விவகாரங்களுக்காக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை மக்களவையில் வழங்கியுள்ளனர். 

DIN

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இணைந்து பல்வேறு விவகாரங்களுக்காக இரு அவைகளிலும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளனர். 

குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதலே எம்.பி.க்கள் இடைநீக்கம், லக்கிம்பூர் கேரி விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் தனியுரிமை மற்றும் சுயாட்சி, நிறுவனங்களின் சுதந்திரம் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என இன்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கினார்.  முன்னதாக பிரதமர் மோடி, முதன்மைச் செயலாளருடன் பொது இடத்தில் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தியது சர்ச்சையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து, மாநிலங்களவையில் வங்கிகள் தனியார்மயமாக்கம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டாக்டர் வி சிவதாசன், பெண்களின் திருமண வயது அதிகரிப்பு குறித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. அப்துல் வாஹீப்பும், லக்கிம்பூர் கேரி சம்பவம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. சக்திசிங் கோஹில் ஆகியோருக்கும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தனர். 

அதுபோன்று லக்கிம்பூர் கேரி சம்பவம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார். 

லக்கிம்பூர் விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை ராஜிநாமா செய்யக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பனிமய மாதா போராலய திருவிழா: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

லாரி மோதி கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மாவட்ட ஹாக்கி போட்டி: கோவில்பட்டி வ.உ.சி. பள்ளி முதலிடம்

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT