ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளால் ஒருவர் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளால் இன்று (புதன்கிழமை) ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகளால் இன்று (புதன்கிழமை) ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
காவல் துறை அதிகாரி ஒருவர் இதுபற்றி கூறுகையில், "ஸ்ரீநகரின் நவகடால் பகுதியில் மாலை 5.55 மணிக்கு பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ரௌஃப் அகமது என்பவர் படுகாயமடைந்தார்.
இதையும் படிக்க | மதமாற்ற தடைச் சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு: கர்நாடகத்தில் போராட்டம்
Advertisement
இதையடுத்து, அவர் எஸ்எம்ஹெச்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். அந்தப் பகுதி தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது" என்றார்.
இந்த சம்பவம் சுட்டுக்கொல்லப்பட்ட ரௌஃப் அகமது என்பவரது வீட்டின் அருகே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.