வருமான வரித்துறை 
இந்தியா

வருமான வரி செலுத்துவோருக்கு ரூ.1.44 லட்சம் கோடி திருப்பி அளிப்பு

வருமான வரி செலுத்துவோருக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ.1.44 லட்சம் கோடி திரும்ப அளிக்கப்பட்டதாக (ரீஃபண்ட்) வருமான வரி (ஐடி) துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

புது தில்லி: வருமான வரி செலுத்துவோருக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ.1.44 லட்சம் கோடி திரும்ப அளிக்கப்பட்டதாக (ரீஃபண்ட்) வருமான வரி (ஐடி) துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டில் இதுவரையில் வரி செலுத்தும் 1.38 கோடி பேருக்கு ரூ.1,44,328 கோடி வருமான வரி ரீஃபண்டாக திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.

இதில், 2021 மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2021-22-ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான திரும்ப வழங்கப்பட்ட ரூ.20,451.95 கோடியும் அடங்கும். வரி செலுத்தும் 99.75 லட்சம் பேருக்கு இந்தத் தொகை திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.

2021 மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2020-21 நிதியாண்டுக்கு டிசம்பா் 21-ஆம் தேதி வரையில் 4 கோடிக்கும் அதிகமானோா் வருமான வரி படிவங்களைத் தாக்கல் செய்துள்ளனா்.

வருமான வரி ரீஃபண்டாக 1,35,35,261 நிறுவனங்களுக்கு ரூ.49,194 கோடி வழங்கப்பட்டுள்ளது. பெருநிறுவன வரி ரீஃபண்ட் பிரிவில் 2.11 லட்சம் பேருக்கு ரூ.95,133 கோடி வழங்கப்பட்டதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT