முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 23 பேருக்கு ஒமைக்ரான்

மகாராஷ்டிரத்தில் மேலும் 23 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் மேலும் 23 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா பாதிப்பு குறித்த சமீபத்திய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 1,179 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 615 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 17 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

ஒமைக்ரான்:

புதிதாக 23 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

23 பேரில் 13 பேர் புனேவைச் சேர்ந்தவர்கள். மும்பையைச் சேர்ந்தவர்கள் 5 பேர், ஒஸ்மனாபாத்தைச் சேர்ந்தவர்கள் 2 பேர். தானே, நாக்பூர் மற்றும் மிரா -பயந்தாரிலிருந்து தலா ஒருவர்.

இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 88 ஆக உயர்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →