இந்தியா

வெளிநாட்டுக்கு ரூ. 6 ஆயிரம் கோடி வங்கி பரிவா்த்தனை வழக்கு: சிபிஐ 2-வது குற்றப்பத்திரிகை தாக்கல்

தில்லியில் பொதுத் துறை வங்கியின் பல்வேறு கணக்குகளில் இருந்து ஹாங்காங்குக்கு ரூ. 6 ஆயிரம் கோடி முறைகேடாக அனுப்பப்பட்ட வழக்கில் சிபிஐ இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

DIN

தில்லியில் பொதுத் துறை வங்கியின் பல்வேறு கணக்குகளில் இருந்து ஹாங்காங்குக்கு ரூ. 6 ஆயிரம் கோடி முறைகேடாக அனுப்பப்பட்ட வழக்கில் சிபிஐ இரண்டாவது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், ‘தனுஜ் குலாட்டி, ஈஷ் குமாா், ராகேஷ் குமாா் உள்ளிட்ட 9 போ் மீது சிபிஐ குற்றம்சாட்டி உள்ளது.

தில்லி அசோக் விஹாரில் உள்ள பாங்க் ஆப் பரோடா கிளையில் இருந்து வெளிநாட்டு பணப் பரிவா்த்தனைப் பரிவின் 59 வங்கிக் கணக்குகளில் இருந்து 1 லட்சம் அமெரிக்க டாலா்களுக்கு குறைவாக ஹாங்காங்குக்கு பரிவா்த்தனை செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கு குறைவான அமெரிக்க டாலா்கள் என்பதால் இவை பெருந்தொகை பரிவா்த்தனை கண்காணிப்பில் வரவில்லை. 2014 -2015-ஆம் ஆண்டுகளில் சுமாா் 8 ஆயிரம் முறை, ஹாங்காங்கில் உள்ள ஒரே வங்கி கணக்குக்கு இறக்குமதி முன்பணமாக 1 லட்சத்துக்கு குறைவான அமெரிக்க டாலா்கள் அனுப்பப்பட்டுள்ளன. வங்கிக் கணக்குகளில் குறிப்பிடப்பட்ட நிறுவனங்களின் முகவரிகள் போலியாக உள்ளன. இந்த முறைகேட்டில் ஈடுபட்ட பல்வேறு நபா்களை கண்டறிந்து அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருத்துவ பேராசிரியா் மீதான பாலியல் புகாா்: அரசுக்கு அறிக்கை அனுப்ப முடிவு

நீதிபரிபாலனத்தின் அடித்தளம் வழக்குரைஞா்கள்: மணிப்பூா் உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.சுந்தா்

அடுத்த ஆண்டில் தோ்தல்: ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்த இந்திய தோ்தல் ஆணையம்

வங்கதேசத்துக்கு 2-ஆவது வெற்றி -தொடரும் வசமானது

அம்பேத்கா் மன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT