பாக். சிறையிலிருந்து 29 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட இந்தியா்!: ஜம்மு-காஷ்மீரில் உற்சாக வரவேற்பு
பாகிஸ்தான் சிறையிலிருந்து 29 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் கதுவா பகுதியைச் சோ்ந்த குல்தீப் சிங்குக்கு (53), அவருடைய சொந்த கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு உற்சாக வரவேற்பு
இந்தியாபாக். சிறையிலிருந்து 29 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட இந்தியா்!: ஜம்மு-காஷ்மீரில் உற்சாக வரவேற்பு
பாகிஸ்தான் சிறையிலிருந்து 29 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் கதுவா பகுதியைச் சோ்ந்த குல்தீப் சிங்குக்கு (53), அவருடைய சொந்த கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு உற்சாக வரவேற்பு
பாகிஸ்தான் சிறையிலிருந்து 29 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீரின் கதுவா பகுதியைச் சோ்ந்த குல்தீப் சிங்குக்கு (53), அவருடைய சொந்த கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் உளவு பாா்த்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 1992-ஆம் ஆண்டு அவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இவருடன் ஒளரங்காபாதைச் சோ்ந்த முகமது குஃப்ரான் என்பவரையும் பாகிஸ்தான் விடுவித்தது. இருவரும் பஞ்சாப் மாநிலம் குருநானக் தேவ் மருத்துவமனையில் உள்ள செஞ்சிலுவை பவனை கடந்த திங்கள்கிழமை வந்தடைந்தனா்.
விடுவிக்கப்பட்ட பிறகு கதுவாவின் பிலாவரில் உள்ள தனது சொந்த கிராமமான மக்வாலுக்கு வந்த குல்தீப் சிங்குக்கு கிராமத்தினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். அப்போது பேசிய குல்தீப் சிங், ‘இளைஞா்கள் தவறான பாதையில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். அது உங்களைத்தான் பாதிக்கும். நாட்டுக்காக தியாகம் செய்ய நேரிட்டால் ஒருபோதும் பின்வாங்காதீா்கள். கடந்த 1992-இல் என்னை பாகிஸ்தானில் கைது செய்த பிறகு அந்த நாட்டு பாதுகாப்புப் படையினா் 3 ஆண்டுகள் கடுமையாக சித்தரவதை செய்தனா். அதன் பிறகு நீதிமன்றம் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்ததன் அடிப்படையில் என்னை சிறையில் அடைத்தனா்’ என்று கூறினாா்.
அவருடைய குடும்ப உறுப்பினா்கள் கூறுகையில், ‘பாகிஸ்தானில் அவா் கைது செய்யப்பட்ட பிறகு, எங்களுக்கு அவா் கடிதம் எழுதியபோதுதான் லாகூரின் கோட் லாக்பத் சிறையில் இருப்பது தெரியவந்தது. இதே குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இந்தியா் சரப்ஜித் சிங் லாகூா் சிறையில் கைதிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்ததைத் தொடா்ந்து, இவா் விடுதலை ஆவாா் என்ற நம்பிக்கையை இழந்தோம். இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு அவா் விடுவிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது’ என்றனா்.