வாஜ்பாயியின் பிறந்தநாள்: குடியரசுத் தலைவர் மரியாதை 
இந்தியா

வாஜ்பாயியின் பிறந்தநாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான மறைந்த அடல் பிகாரி வாஜ்பாயியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

PTI


புது தில்லி: முன்னாள் பிரதமரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான மறைந்த அடல் பிகாரி வாஜ்பாயியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

1924ஆம் ஆண்டு குவாலியரில் டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்தார் வாஜ்பாயி. நீண்ட காலம் பாஜகவின் தலைவராக பதவி வகித்தவர். முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத மற்று கட்சியைச் சேர்ந்த ஒருவர், பிரதமராக 5 ஆண்டுகாலம் பதவி வகித்தவர் என்ற பெருமையைப் பெற்றவர். 

அவரது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், புது தில்லியில் உள்ள வாஜ்பாயியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமாகி 15 ஆண்டுகள்! மனைவிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து!

ஜம்மு - காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

SCROLL FOR NEXT