முகப்பு
இந்தியா

5 மாநில தேர்தல் ஒத்திவைக்கப்படுமா? சுகாதாரத்துறை செயலருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

அடுத்தாண்டு தொடக்கத்தில் 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒமைக்ரான் பரவல் குறித்து ராஜேஷ் பூஷணுடன் தேர்தல் ஆணைய மூத்த அதிகாரிகள் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
தேர்தல் ஆணையம்
பகிர்:

அடுத்தாண்டு தொடக்கத்தில் 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஒமைக்ரான் பரவல் குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷணுடன் தேர்தல் ஆணைய மூத்த அதிகாரிகள் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர்.

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே நாடு முழுவதும் ஒமைக்ரான் கரோனா வகை பரவி வருகின்றது.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் மற்றும் சுகாதாரத்துறை மூத்த அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

இந்த கூட்டத்தில், ஒமைக்ரான் பரவல், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் கரோனா தடுப்பூசி செலுத்திவர்களின் விவரம் உள்ளிட்டவை ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பேசிய நீதிபதிகள், ஒமைக்ரான் பரவல் காரணமாக சட்டப்பேரவைத் தேர்தலை 2 மாதங்கள் ஒத்திவைக்க பரிந்துரை செய்தனர். தொடர்ந்து, பொது கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை விதிக்கவும் கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →