முகப்பு
இந்தியா

சண்டீகர் மாநகராட்சித் தேர்தல்: ஆம் ஆத்மி முன்னிலை

சண்டீகர் மாநகராட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 2 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
கோப்புப்படம்
பகிர்:

சண்டீகர் மாநகராட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 2 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சண்டீகர் மாநகராட்சித் தேர்தலில் 35 வார்டுகளுக்கான வாக்குப் பதிவு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக, சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே களமிறங்கின.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று  நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காலை முதலே ஆம் ஆத்மியின் வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர்.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 2 மணி நிலவரப்படி, ஆம் ஆத்மி 14, பாஜக 12, காங்கிரஸ் 8, சிரோமணி அகாலி தளம் ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →