இந்தியா

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 578-ஆக உயர்வு

DIN

இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578ஆக அதிகரித்துள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பா் 24-ஆம் தேதி கண்டறியப்பட்ட கரோனா தொற்றின் உருமாறிய வகையான ஒமைக்ரான் தீநுண்மி, தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பரவல் பன்மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியாவில் பாதிப்பு 250: இந்தியாவில் முதல் ஒமைக்ரான் பாதிப்பு கடந்த டிச. 2-ஆம் தேதி பெங்களூரில் உறுதி செய்யப்பட்டது. 

அதைத் தொடா்ந்து ஒமைக்ரான் தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை மெல்ல உயா்ந்து வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தில்லி 142, மகாராஷ்டிரம் 141, கேரளம் 57, குஜராத் 49, ராஜஸ்தான் 43, தெலங்கானா 41, தமிழ்நாடு 34, கர்நாடகம் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேசமயம் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 578 பேரில் 151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று தற்போது தில்லி, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், கா்நாடகம், தெலங்கானா, குஜராத், கேரளம், ஆந்திரம், சண்டீகா், மேற்கு வங்கம் உள்பட 19 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT