முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மேலும் 26 பேருக்கு ஒமைக்ரான்

​மகாராஷ்டிரத்தில் மேலும் 26 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் மேலும் 26 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 1,426 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 1,41,454 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 66,59,314 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 776 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 65,03,733 பேர் குணமடைந்துள்ளனர்.

நோய்த் தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டி 10,441 ஆக உள்ளது.

மேலும் 26 பேருக்கு ஒமைக்ரான் வகை தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மகாராஷ்டிரத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 167 ஆக உயர்ந்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →