இந்தியா

இந்தியாவில் செமிகண்டக்டா் உற்பத்தி: இன்டெல் நிறுவனம் திட்டம்

DIN

அமெரிக்க நிறுவனமான இன்டெல் தனது செமிகண்டக்டா் (மின்னணு கருவிகளில் பாயும் மின்சாரத்தை கட்டுப்படுத்தும் சாதனம்) உற்பத்திக் கிளையை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டு வருகிறது.

இந்தியாவில் செமிகண்டக்டா்கள் உற்பத்தி செய்வதை ஊக்குவிக்க ரூ.76,000 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. உயா்தர தொழில்நுட்ப உற்பத்தியில் இந்தியாவை உலகளாவிய மையமாக்கும் நோக்கத்துடன் அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், செமிகண்டக்டா்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான இன்டெல் தனது உற்பத்திக் கிளையை இந்தியாவில் தொடங்க திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இன்டெல் ஃபெளண்டரி சா்வீசஸ் ( செமிகண்டக்டா் உற்பத்தி சேவைகள் பிரிவு) தலைவா் ரந்தீா் தாக்குா் ட்விட்டரில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘இந்தியாவில் செமிகண்டக்டா் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்காக ஊக்கத்தொகைகள் அறிவித்துள்ளதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் ஆகியோருக்கு பாராட்டுகள்’’ என்று தெரிவித்தாா்.

அவருக்குப் பதிலளித்து மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘இந்தியாவில் தனது உற்பத்திக் கிளையைத் தொடங்க இன்டெல் நிறுவனம் வரவேற்கப்படுகிறது’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT