இந்தியா

பூஸ்டர் டோஸ் செலுத்த தேவைப்படும் ஆவணங்கள் என்ன? மத்திய அரசு விளக்கம்

DIN

கரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் போது சமர்பிக்க வேண்டிய ஆவணங்கள் குறித்து மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை விளக்கம் அளித்துள்ளது.

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழலில் இணை நோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு ஜனவரி 10, 2022 முதல் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், பூஸ்டர் டோஸ் செலுத்த வரும் இணை நோயுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோர் இணை நோய் குறித்து மருத்துவர்களிடம் எந்த சான்றிதழும் பெற வேண்டிய அவசியம் இல்லை. தடுப்பூசி செலுத்தும் போது மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளலாம்.

முந்தைய இரண்டு தவணைகள் தடுப்பூசி செலுத்தும் போது அளித்த பதிவு எண்ணை மட்டும் கொண்டு வந்தால் போது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

SCROLL FOR NEXT