சென்னை உயர்நீதிமன்றம் 
இந்தியா

புதுவையில் 2 நாள்கள் மது விற்பனைக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம்

புதுச்சேரியில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதி மது விற்பனைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

DIN

புதுச்சேரியில் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1ஆம் தேதி மது விற்பனைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

புதுவையில் கரோனா கட்டுப்பாடுகளுடன் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனா்.

இந்நிலையில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் வேளையில் இந்தக் கொண்டாட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என தடை கோரி இன்று வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் புதுச்சேரி அரசுத் தரப்பில், “புத்தாண்டு அன்று இரவு 12.30 மணிக்கு மேல் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்தாண்டை போல் கரோனா பரவல் இல்லை என தெரிவிக்கப்பட்டது.”

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பேசியதாவது, “புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31ஆம் தேதி இரவு 7 மணி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை மது விற்பனைக்கு தடை விதித்தும், விடுதிகளில் இதுவரை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தங்கிக் கொள்ளலாம் எனவும் உத்தரவிடப் போவதாக தெரிவித்தனர்.”

மேலும், மதுவிற்பனைக்கு தடை விதிப்பது குறித்த புதுவை அரசின் நிலைபாட்டை சற்று நேரத்தில் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்மையின் அழகு... ரச்சித்தா மகாலட்சுமி

பட்டமாக பறக்கிறேன்...ஜனனி அசோக்குமார்

இந்த வாரம் கலாரசிகன் - 03-08-2025

வெள்ளைப் புறா... ஆஷிகா ரங்கநாத்

கம்பனின் தமிழமுதம் - 56: தன் நிலை தாழ்ந்தால்!

SCROLL FOR NEXT