முகப்பு
இந்தியா

கரோனா அச்சுறுத்தல்: புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த கோவா

கோவாவில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Updated On : 29 டிசம்பர், 2021 at 8:33 PM
கரோனா அச்சுறுத்தல்: புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த கோவா
பகிர்:

கோவாவில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கரோனா தொற்று பரவல் காரணமாக கோவாவில் புதிய கரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மதுபான விடுதிகள், திரையரங்குகள், அரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்களில் 50 சதவிகித எண்ணிக்கை அளவில் மட்டுமே மக்களுக்கு அனுமதியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டும் கோவாவிற்குள் நுழைய அனுமதியளிக்கப்படும் எனவும், மாநிலத்திற்குள் நுழைவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனை சான்றிதழை வைத்திருப்பது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் 112 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.