இந்தியா

நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா: புதிதாக 9,195 பேர் பாதிப்பு; 302 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 9,195 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 302 பேர் உயிரிழந்தனர்.

DIN


நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 9,195 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 302 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், உருமாறிய கரோனா வகையான ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், கொவைட் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,  புதிதாக 9,195 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.48 கோடியாக அதிகரித்து வருகிறது. புதிதாக 302 பேர் உயிரிழந்ததால், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 80,592-ஆக அதிகரித்துள்ளது. ஒரு நாளில் மட்டும் 7,347 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 77,002 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் குணமடைந்தோர் விகிதம் 98.40% ஆக உயர்ந்துள்ளது. 

உயிரிழந்தோர் விகிதம் 1.38% ஆகவும், சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.22% ஆக குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT