இந்தியா

கோவா: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்

DIN

கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயம் என முதல்வர் பிரமோத் சாவந்த் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒமைக்ரான் கரோனா வகை வேகமாக பரவி வரும் சூழலில், பல்வேறு மாநிலங்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடையும் கட்டுப்பாடுகளும் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த கோவா முதல்வர் பேசுகையில்,

கோவாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்பவர்கள் இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது ஆர்டிபிசிஆர் பரிசோதனை முடிவுகள் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், கட்டுப்பாடுகள் குறித்த விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT