இந்தியா

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பகுதிகளுக்கு புதிய பெயர்...சீண்டும் சீனா...பதிலடி கொடுத்த இந்தியா

DIN

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 15 இடங்களுக்கு சீனா புதிய பெயர் சூட்டியுள்ள நிலையில், அதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் செயலுக்கு எதிர்வினை ஆற்றியுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், அருணாச்சல பிரதேசம் இப்போதும் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தை தெற்கு திபெத் எனக் குறிப்பிட்டுவரும் சீனா, அங்குள்ள 15 பகுதிகளுக்கு புதிய பெயரை சூட்டியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "இதுபோன்றவற்றை பார்த்துவிட்டோம். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள இடங்களுக்கு சீனா புதிய பெயர் வைக்க முயற்சிப்பது இது முதல் முறை அல்ல. 2017ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், இதுபோன்று பெயர்களை வழங்க முயற்சித்தது. 

அருணாச்சலப் பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்து வருகிறது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை வைப்பது இந்த உண்மையை மாற்றாது" என்றார்.

புதன்கிழமையன்று சீனா அரசின் அதிதாரப்பூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸில் வெளியான செய்தியில், "சீனம், திபெத் மற்றும் ரோமானிய எழுத்துகளை பயன்படுத்தி ஜாங்னனில் (அருணாச்சல பிரதேசத்திற்கு சீனா வைத்த பெயர்) உள்ள 15 இடங்களுக்கு புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. சீனா அமைச்சரவையின் மாநில கவுன்சில் வெளியிட்ட விதிகளின் படி புவியியல் சார்ந்த பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாவது கட்டமாக, அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயர் சூட்டியுள்ளது. முதல் கட்டமாக, கடந்த 2017ஆம் ஆண்டு, ஆறு இடங்களுக்கு புதிய பெயர் சூட்டியது. தீர்க்கரேகை, அட்சரேகை ஆகியவற்றின் அடிப்படையில் புதிதாக பெயர் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளது. 

எட்டு குடியிருப்பு பகுதிகள், நான்கு மலை பகுதிகள், இரண்டு ஆறுகள், ஒரு மலைப்பாதை ஆகியவைக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்தாண்டு மே மாதம், இந்திய, சீனா ராணுவ வீரர்களுக்கிடையே மோதல் வெடித்ததையடுத்து, இருநாடுகளுக்கிடையே பதற்றமான நிலையே இருந்துவருகிறது. இதற்கு மத்தியில், பெயர் மாற்றும் படலம் அரங்கேறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

சிரிப்பே துணை!

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

SCROLL FOR NEXT