இந்தியா

வேலை உருவாக்கத்தில் பட்ஜெட் முக்கியப் பங்காற்றும்: நட்டா

DIN


மத்திய நிதிநிலை அறிக்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் வேலை உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றும் என தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா பாராட்டு தெரிவித்துள்ளார்.

2021-22 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

இதுபற்றி ஜெ.பி. நட்டார் கூறியது:

"இதுதான் முதல் டிஜிட்டல் நிதிநிலை அறிக்கை. இந்த நிதிநிலை அறிக்கை அனைவருக்குமானது. வயதானவர்கள், இளைஞர்கள், பெண்கள், அமைப்புமுறை மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள், சிறு மற்றும் பெரிய தொழில் நிறுவன அதிபர்கள் என அனைவரது எதிர்பார்ப்பையும் விருப்பத்தையும் இந்த நிதிநிலை அறிக்கை பூர்த்தி செய்யும்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அவரது குழுவினருக்கு வாழ்த்துகள்.

நிதிநிலை அறிக்கையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் நாட்டில் வேலை உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றும்." என்றார் நட்டா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சாரதா மடத்தின் தலைவா் ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி மறைவு

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் பைக்குகளில் சுற்றிய 6 போ் கைது

ரூ.2 லட்சம் சவுக்கு மரங்கள் தீயில் சேதம்: இருவா் மீது வழக்கு

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டிஎஸ்பி சாட்சியம்

SCROLL FOR NEXT