முகப்பு
இந்தியா

இந்தியாவில் ஒரேநாளில் 11,427 பேருக்கு கரோனா: 118 பேர் பலி

இந்தியாவில் ஒரேநாளில் 11,427 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:25 PM
பகிர்:

இந்தியாவில் ஒரேநாளில் 11,427 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இன்று காலை 8 மணி வரை, புதிதாக 11,427  பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,07,57,610-ஆக அதிகரித்துள்ளது. 
கரோனா தொற்றில் இருந்து மேலும் 11,858 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,04,34,983-ஆக அதிகரித்தது. கரோனா தொற்றுக்கு மேலும் 118 போ் உயிரிழந்தனா். 
இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,54,392-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 1,68,235 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 19.70 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
இதில், நேற்று மட்டும் 5,04,263 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments