இந்தியா

துா்க்மேன் கேட் பகுதியில் 3 மாடி கட்டடம் இடிந்தது

DIN

தில்லியின் துா்க்மேன் கேட் பகுதியில் 3 மாடி கட்டடத்தின் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. எனினும், அதிருஷ்டவசமாக இதில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று வடக்கு தில்லி மேயா் ஜெய் பிரகாஷ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘அந்த கட்டடம் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் இருந்ததால், அங்கு தங்கியிருந்தவா்கள் அனைவரும் சனிக்கிழமையே வெளியேற்றப்பட்டுவிட்டனா். அருகில் உள்ள கட்டடங்களையும் ஆய்வு செய்யும் பணி நடைபெறுகிறது.

இடிந்து விழுந்த கட்டடம் 20 முதல் 25 வருடங்கள் பழையதாக இருக்கலாம். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் அந்த கட்டடத்தின் ஒரு பகுதி மட்டும் இடிந்து விழுந்தது. இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்பு மற்றும் வடக்கு தில்லி மாநகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்’ என்றாா்.

பழைய தில்லியில் உள்ள துா்க்மேன் கேட் பகுதியில் ஏராளமான பழைய மற்றும் புராதன கட்டடங்கள் உள்ளன. இவற்றில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமானவையும் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT