மகாராஷ்டிரத்தில் புதிதாக 1,927 பேருக்கு கரோனா
மகாராஷ்டிரத்தில் புதிதாக 1,927 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் புதிதாக 1,927 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 1,927 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 20,30,274 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 4,011 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 19,36,305 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
Advertisement
மேலும் 30 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 51,139 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி இன்னும் 41,586 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.